கனடாவில் இந்த வாகனம் பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை
கனடாவில் போர்ஸே (Porsche) வாகனங்களை பயன்படுத்துவோருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நிறுவனத்தின் சில மாடல்களின் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனங்களின் சில்லுகள் சில சந்தர்ப்பங்களில் கழன்று விடக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடிய போக்குவரத்து முகவர் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சுமார் 322 கார்கள் இவ்வாறு மீள அழைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்களை மீள அழைக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. பின்வரும் மாடல்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
• 2024 718 Spider
• 2024 911 Carrera
• 2024 911 GT3
• 2024 911 Targa
• 2024 911 Turbo
இந்த வகை வாகனங்களை வைத்திருப்பவர்கள் அனுமதி பெற்ற விநியோகஸ்தர்களிடம் ஒப்படைக்குமாறும் அவர்கள் வாகனத்தை பழுது பார்த்து மீள ஒப்படைப்பார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வாகனங்கள் தொடர்பில் ஏதேனும் தகவல்கள் தேவை என்றால் 1-800-767-7243 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.