கனடாவிலிருந்து மீளப் பெறப்படும் வாகனங்கள்
கனடாவில் போர்ஸே Porsche நிறுவனம் மொத்தம் 3,211 வாகனங்களை பாதுகாப்பு காரணங்களுக்காக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.
கனடாவின் போக்குவரத்து அமைச்சு இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது. முந்தைய திருத்தப்பணிகளை Porsche விற்பனை நிலையங்கள் செய்திருந்தாலும், அவை போதுமானதாக இல்லாமலிருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், குறிப்பிட்ட சில வாகனங்களில் இரண்டாவது திருத்தப்பணி அவசியமாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. “சில வாகனங்களில் உயர்வோல்ட் மின்சார ஹீட்டர் செயலிழக்கலாம்.

இது நடந்தால், கேபின் உள்வெப்பம் குறையலாம் மற்றும் முன்கண்ணாடி உறை நீக்கும் அமைப்பு சரியாக இயங்காது,” என்று அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
“முன்கண்ணாடி உறை நீக்கி (defroster) இயங்காததால் பார்வை குறைந்து விபத்துக்கான அபாயம் அதிகரிக்கும்,” என எச்சரிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட மாடல்கள்: • போர்ஷே டைகான் (Porsche Taycan) – 2020 முதல் 2024 வரை
• போர்ஷே டைகான் கிராஸ் டூரிஸ்மோ (Porsche Taycan Cross Turismo) – 2021 முதல் 2024 வரை
• போர்ஷே டைகான் கிராஸ் டூரிஸ்மோ டர்போ (Porsche Taycan Cross Turismo Turbo) – 2021 முதல் 2024 வரை
• போர்ஷே டைகான் டர்போ (Porsche Taycan Turbo) – 2020 முதல் 2024 வரை Porsche நிறுவனம், பாதிக்கப்பட்ட வாகன உரிமையாளர்களுக்கு அஞ்சல் மூலம் அறிவித்துக், அவர்களின் வாகனங்களை அருகிலுள்ள விற்பனை நிலையத்துக்கு கொண்டு சென்று மின்சார ஹீட்டரை மேம்படுத்தப்பட்ட புதிய பகுதியால் மாற்றுமாறு அறிவுறுத்தியுள்ளது.