கனடாவில் 91 பயணிகளுடன் பயணித்த விமான அவசர தரையிறக்கம்
ஹாமில்டனில் இருந்து வென்கூவர் நோக்கி புறப்பட்ட போர்டர் எயர்லைன்ஸ் விமானம் 483, ரெஜைனா சர்வதேச விமான நிலையத்தில் (YQR) அவசரமாக தரையிறக்கப்பட்டது.
விமானம் உள்ளே புகை வாசனை உணரப்பட்டதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரெஜைனாவில் தரையிறக்க முடிவு செய்யப்பட்டதாக போர்டர் எயர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.
புகை எதுவும் தென்படவில்லை என்றாலும், விமானக்கேபினில் புகை வாசனை இருந்ததால் விமானிகள் ரெஜைனாவில் தரையிறக்க முடிவு செய்தனர் என விமான நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
ரெஜைனா விமான நிலையம் மற்றும் அவசரச் சேவைகள் உடனடியாக அவசர நடவடிக்கையை ஆரம்பித்ததாக விமான நிலைய அதிகாரசபை தலைவர் ஜேம்ஸ் போகஸ் தெரிவித்தார். விமானிகள் அவசர நிலை அறிவித்ததையடுத்து எங்கள் குழு உடனடியாக பதிலளித்தது.
விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியது,” என்று அவர் கூறினார். விமானத்தில் மொத்தம் 91 பயணிகள் இருந்ததுடன், அவர்கள் அனைவரும் விமான நிலைய கட்டிடத்திற்குள் பாதுகாப்பாக நகர்த்தப்பட்டனர்.
“பயணிகள் இன்று இரவு ஹோட்டல்களில் தங்கியிருக்கின்றனர். நாளை மற்றொரு விமானத்தில் வென்கூவருக்குப் பயணிக்கலாம் என போர்டர் நிறுவனத்தின் செய்தித்தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார்.