கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு காட்டு விலங்கு இறைச்சி கடத்தல்
கனடாவிலிருந்து அமெரிக்காவிற்கு காட்டு விலங்குகளின் இறைச்சி வகைகள் சட்டவிரோதமாக கடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்க சுங்க மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பு (CBP), டெட்ராய்ட் மெட்ரோபொலிட்டன் விமான நிலையத்தில் ஒரு வாரத்தில் இரண்டு முறை ‘நோயைப் பரப்பக்கூடிய’ காட்டு விலங்கு இறைச்சியை (புஷ்மீட்) பறிமுதல் செய்துள்ளது.
காட்டு விலங்கு இறைச்சி என்பது வெளவால், மனிதரல்லாத புரைமேட் விலங்குகள், மற்றும் சில பகுதிகளைச் சேர்ந்த எலிகள் போன்றவற்றின் இறைச்சியைக் குறிக்கிறது.
இவை அமெரிக்காவிற்கு கொண்டு செல்வது சட்டவிரோதமானது என்பதுடன் குறிப்பிடத்தக்க நோய் அபாயத்தை ஏற்படுத்தக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பறிமுதல் செய்யப்பட்ட இறைச்சி, நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களுக்கு (Centers for Disease Control and Prevention) ஒப்படைக்கப்பட்டது.
இவ்வாறு சட்டவிரோதமான முறையில் விலங்கு இறைச்சி வகைகளை கொண்டு சென்றவர்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பயணிக்கும் சுமார் 300 டொலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.