பாலியல் தொழிலுக்காக கடத்துதல் ; அமெரிக்காவில் 5 இந்தியர்கள் கைது
பாலியல் தொழிலுக்காக சிறுமிகளை கடத்திய வழக்கில் 5 இந்தியர்களை அமெரிக்க பொலிஸார் கைது செய்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்காவின் நெப்ராஸ்கா மாகாணத்தில் மனித கடத்தலில் ஈடுபடும் கும்பலைக் குறிவைத்து கடந்த வாரம் மிகப்பெரிய அளவிலான சோதனையை பொலிஸார் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒமாஹா மெட்ரோ பகுதிகளில் உள்ள விடுதிகளில் நடத்தப்பட்ட சோதனையில், 12 வயதுக்குட்பட்ட 10 பேர், 17 ஆண்கள் மற்றும் பெண்கள் என மொத்தம் 27 பேரைக் பொலிஸார் மீட்டனர். இவர்களிடம் பொலிஸார் நடத்திய விசாரணையில் அனைவரும் கடத்தப்பட்டு விடுதி பணிக்காக பயன்படுத்தப்பட்டமை தெரியவந்துள்ளது.
நீண்ட நேர வேலை, குறைவான ஊதியம், சிலருக்கு ஊதியமே வழங்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
மேலும், சில பெண்களையும் சிறுமிகளையும் கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.