ஈராக் முழுதும் மின்தடை
கோடைக்கால வெப்பம் மின்சாரத்துக்கான தேவையை உயர்த்தியிருப்பதால் ஈராக் முழுதும் மின்தடை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஈராக்கின் சில பகுதிகளில் வெப்பம் 50 செல்சியஸ் வரை உயரும் என்றும் ஒரு வாரத்துக்கு மேல் அந்த நிலை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
பல வீடுகள் தனிப்பட்ட மின் உற்பத்தி இயந்திரங்களைப் பயன்படுத்துவதால் மின்சாரத் தடையின் தாக்கம் குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மின்தடையைச் சரிசெய்யும் பணிகள் நடைபெற்றுவருகின்றதாகவும் அந்நாட்டு அதிகாரிகள் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை ஈராக்கில் மின்தடை என்பது அடிக்கடி நிகழும் பிரச்சினையாக இருந்துவருகிறது. வெப்பமான காலங்களில் அது இன்னும் மோசமாவதாகக் கூறப்படுகிறது.