டொரொன்டோவில் சீரற்ற காலநிலை குறித்து எச்சரிக்கை
டொரொன்டோ மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் இந்த வார இறுதியில் கடுமையான புயலை எதிர்கொள்ளலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புயல் மழை, உறைமழை (freezing rain) ஆகியவற்றைக் கொண்டிருக்கும்.
டொரொன்டோ தற்போது சிறப்பு காலநிலை அறிவிப்பின் கீழ் உள்ளது, மேலும் யார்க் (York) மற்றும் டர்ஹாம் (Durham) பகுதிகளுக்கு உறைமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
மழை இன்று மாலை தொடங்கும், பின்னர் உறைமழையாக மாறும். குளிர்ச்சியான நிலை காரணமாக சில பகுதிகளில் உறைமழை நீண்ட நேரம் தொடரலாம் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
டொரொன்டோவில் 3 முதல் 5 மில்லிமீட்டர் வரை உறைமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சாரத் தடைகள் எனவும் பாதைகள் வழுக்கும் தண்மையுடன் காணப்படலாம் எனவும் மற்றும் மரக்கிளைகள் முறிந்து விழக்கூடிய அபாயம் காணப்படுவதாகவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் வாகனங்களை செலுத்த வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.