பெருவெள்ளம்... அடித்துச் செல்லப்பட்ட சிறுவன்: முக்கிய மாகாணத்தில் மக்கள் வெளியேற்றம்
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் மீண்டும் ஒரு சக்திவாய்ந்த புயல் சூழ்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
திங்களன்று 5 வயது சிறுவன் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், கடற்கரையை ஒட்டியுள்ள ப்ரிட்டன் இளவரசர் ஹரி மற்றும் ஊடக பிரபலம் ஓப்ரா வின்ஃப்ரே உட்பட பலரும் தங்கள் குடியிருப்புகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
பல்லாயிரக்கணக்கான மக்கள் மின்சாரம் இல்லாமல் தவிக்கவிடப்பட்டுள்ளனர். சில பள்ளிகள் நாள் முழுவதும் மூடப்பட்டன. தெருக்கள் மற்றும் பிரதான சாலைகள் வெள்ளத்தால் மூழ்கியுள்ளன. மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது.
சாலைகளில் சகதி சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் அவதிக்கு உள்ளானதாக கூறுகின்றனர். மேலும், புயல் மற்றும் பெருவெள்ளத்தில் சிக்கி இதுவரை 14 பேர்கள் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடையே, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட சிறுவன் தொடர்பில் 7 மணி நேர தீவிர தேடுதலுக்கு முடிவில், ஷூ மட்டும் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளது.
இருப்பினும், சிறுவன் இறந்ததாக இதுவரை அதிகாரிகளால் உறுதி செய்யப்படவில்லை.
இதனிடையே, திங்களன்று ஒரு டசினுக்கும் மேற்பட்ட மாவட்டங்களில் புயல் மீட்பு மற்றும் நிவாரண முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அவசரகால அறிவிப்பை வெளியிட்டுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன்.