முன்கூட்டிய தாக்குதல்; இஸ்ரேலிற்கு ஈரான் பகிரங்க எச்சரிக்கை
காசாவில் இஸ்ரேல் உரிய பின்விளைவுகள் இன்றி செயற்படுவதற்கு அனுமதிக்கப்போவதில்லை என எச்சரித்துள்ள ஈரான் எதிர்வரும் மணித்தியாலங்களில் முன்கூட்டிய தாக்குதல் ஒன்று குறித்தும் எச்சரித்துள்ளது.
இதனை ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹ_சைன் அமிரப்துல்லா ஹியன் தெரிவித்துள்ளார்.
போர்க்குற்றங்கள் நிறுத்தப்படாவிட்டால் ....
காசாவில் பாலஸ்தீனியர்களிற்கு எதிரான போர்க்குற்றங்கள் நிறுத்தப்படாவிட்டால் வரவிருக்கும் மணிநேரத்தில் எதிர்ப்பு முன்னணி முன்கூட்டிய நடவடிக்கையை மேற்கொள்ளும் என வெளிவிவகார அமைச்சர் எச்சரித்துள்ளார்.
அதேசமயம் ஹெஸ்புல்லா உட்பட பாலஸ்தீன ஆதரவு அமைப்புகள் சேர்ந்தே இந்த எதிர்ப்பு முன்னணியை உருவாக்கியுள்ளன. கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமான இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரால் காசா உருக்குலைந்துபோயுள்ளது.
அதோடு அங்குள்ள மக்கள் உணவும் நீரும் இன்றி அல்லப்பட்டுவருகின்றனர்.
போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக காஸாவுடனான எகிப்தின் எல்லையில் நிவாரணப் பொருள்களுடன் பல லாரிகள் காத்துக்கொண்டிருக்கின்றபோது இஸ்ரேல் அதற்கான அனுவதியை வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.