ஜனாதிபதியின் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களை பதிவிட முடியாது
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் கருத்துக்களை பதிவிடும் வசதி செயலிழக்க செய்யப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் ஜனாதிபதியின் முகநூல் பக்கத்தை பார்வையிடும் பயனர்களுக்கு இதற்கு முன்னர் இந்த வசதி வழங்கப்பட்டிருந்தது.
ஜனாதிபதி முகநூல் சமூக வலைத்தள கணக்கில் அண்மைய காலமாக பல்வேறு நபர்கள் மோசமாக விமர்சித்து கருத்துக்களை பதிவிட்டு வந்தனர்.
இதன் காரணமாகவே கருத்து பதிவு வசதி செயலிழக்க செய்யப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி, டொலர் தட்டுப்பாடு என்பன காரணமாக எரிபொருள் உட்பட அத்தியவசிய பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன் எரிபொருளுக்கும், சமையல் எரிவாயுக்கும் கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது.
இதன் காரணமாக மக்கள் ஜனாதிபதி உட்பட அரசாங்கத்தின் மீது கடும் சீற்றத்தில் இருந்து வருவதை அவதானிக்க முடிவதாக சமூக அவதானிகள் தெரிவித்துள்ளனர்.