ஜனாதிபதி இம்மானுவேல் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
பிரான்ஸில் புலம்பெயர்ந்தோர் தொடர்பான சட்டங்களில் மாற்றம் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன்(Emmanuel Macron) தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, தகுதியற்ற புலம்பெயர்ந்தோரை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான சட்டங்களை முழுமையாக சீர்திருத்த விரும்புவதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
குடியிருப்பு அனுமதி மறுத்தால் அல்லது நாட்டில் சட்டவிரோதமாக வசிக்கும் பட்சத்தில், பிரான்சில் இருக்க உரிமை இல்லாதவர்களுக்கு நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான உத்தரவு வழங்கப்படுகிறது.
அவ்வாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டவர்கள் 30 நாட்களுக்குள் உங்கள் சொந்த நாட்டிற்கான பயணத்திற்கான பிரான்ஸ் நாட்டை விட்டு வெளியேற வேண்டும். இந்த சட்டம் பிரான்ஸில் உரிய முறையில் முன்னெடுக்கப்படுவதில்லை என குற்றம் சுமத்தப்பட்டு வருகின்ற நிலையத்தில் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்வதாக ஜனாதிபதி கூறியுள்ளார்.
அண்மையில் லோலா என்ற சிறுமியை கொடூரமாக கொலை செய்தமை தொடர்பில் அல்ஜீரிய நாட்டு பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அவர் நாட்டில் இருந்து வெளியேற்றப்படவிருந்தவர்.
எனினும் அவர் உரிய நேரத்தில் நாட்டை விட்டு வெளியேறாமையினால் சிறுமி உயிரிழந்ததாக பல தரப்பினரால் எதிர்ப்பு வெளியிடப்பட்டது. இது தொடர்பில் கருத்து வெளியிட்ட ஜனாதிபதி “நாம் நாட்டிற்கு வர விரும்புவோரை சிறப்பாக வரவேற்கவும், தகுதியற்றவர்களை அவர்களது நாட்டிற்கு விரைவாக அனுப்புவதற்கும் சட்டங்களை முழுமையாக சீர்திருத்தம் செய்யவுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
100 சதவீத நாடுகடத்துதல் விகிதத்தை நோக்கி நகர்த்துவதற்கு உரிய நபரின் பிறப்பிடமான நாடுகளுடன் கலந்துரையாடவுள்ளதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார். குடியேற்றத்திற்கும் பாதுகாப்பின்மைக்கும் இடையே ஒருபோதும் தொடர்பை ஏற்படுத்த மாட்டேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
எப்படியிருப்பினும், குற்ற விகிதங்களைப் பார்க்கும்போது, எடுத்துக்காட்டாக, சட்டவிரோத குடியேற்ற அதிகமாக இருக்கும் நகரம் பாரிஸாகும். குற்ற விகிதங்களில் இது மிகவும் உயர்ந்த இடத்தில் உள்ளதென ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.