ரஷ்யாவின் பொருளாதாரம் குறித்து ஜனாதிபதி புட்டின் வெளியிட்ட தகவல்!
ரஷ்ய பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுகிறது என ஜனாதிபதி புட்டின்(Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ரஷ்யாவின் பொருளாதாரம் 2.5 வீதம் குறைவடையும் என பொருளாதார நிபுணர்கள் கணித்திருந்தனர்.
இருப்பினும் நிபுணர்கள் கணித்ததை விட பொருளாதாரம் சிறப்பாக இருப்பதாக புட்டின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
நிதியமமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கித் தலைவர்கள் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுடனான சந்திப்பில் பேசுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
தொடர்ந்து தெரிவித்த அவர், ரஷ்யாவின் உயர்மட்ட வணிகர்களின் மீது மேற்குலக நாடுகள் பொருளதார தடைகளை விதித்துள்ளன.
அதேநேரம் மேற்கத்தேய நிறுவனங்கள் பல தமது செயற்பாடுகளை ரஷ்யாவில் நிறுத்தியுள்ளன. இந்நிலையில், பொருளாதார வல்லுநர்கள் பலர், ரஷ்யாவின் பொருளாதாரம் 20 வீத பொருளாதர சரிவை கணித்திருந்தனர்.
இது ஆண்டுக்கு 2.5 வீதம் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சூழ்நிலையில் ரஷ்யாவின் பொருளாதாரம் எதிர்பார்த்ததை விட சிறப்பாக இருக்கிறது என ஜனாதிபதி புட்டின்(Vladimir Putin) தெரிவித்துள்ளார்.