அதிபர் புட்டின் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!
போரில் ஈடுபடும் அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த தயாராக உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின்(Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
அரசு தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் இவ்வாறு கூறியுள்ளார். இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், நாங்கள் பேச்சுவார்த்தைக்கு மறுப்பவர்கள் அல்ல.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தைகளை நடத்த நாங்கள் தயாராக உள்ளோம்.
உக்ரைனில் சரியான திசையில் ரஷ்யா செயற்படுவதாக தெரிவித்த அவர், அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ரஷ்யாவை பிளவுப்படுத்த முயற்சிப்பதாகவும் குற்றம் சாட்டினார்.
எங்கள் தேசிய நலன்கள், குடிமக்களுடைய நலன்களை நாங்கள் பாதுகாப்பதாக நம்புகிறேன் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.