அதிபர் புடின் விரைவில் அணுஆயுத்தை விடுக்கலாம்; அமெரிக்கா எச்சரிக்கை
மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக புடின் விரைவில் அணுஆயுத எச்சரிக்கை விடுக்கலாம் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
உக்ரைன் நாடு நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த பிப்ரவரி 24ந் திகதி அந்நாடு மீது ரஷ்யா படையெடுத்தது.இந்த போர் இன்று 23-வது நாளாக இன்று தொடர்கிறது.
இந்நிலையில் ரஷ்யா போரை தீவிர படுத்த அதிபர் புடின் விரைவில் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக அணுஆயுத எச்சரிக்கை விடலாம் என அமெரிக்க ராணுவத்தின் உளவுத்துறை தெரிவித்துள்ளது.
இது குறித்து பென்டகன் உளவுத்துறை விடுத்துள்ள அறிக்கையில் உக்ரைன் நாட்டின் பாதுகாப்பான பகுதிகள் ரஷ்யாவிற்கு சவாலை தருகின்றன. இதனால் அவர்களின் மனித சக்தி மற்றும் நவீனமயமாக்கப்பட்ட ஆயுதங்களின் எண்ணிக்கை குறைகிறது.
இதன் விளைவாக நீண்டகால பொருளாதார மந்தநிலைக்கு ரஷ்ய உள்ளாகலாம். இந்த போர் தொடர்ந்து நீளும்பட்சத்தில் அதன் விளைவுகள் ரஷ்யாவை பலவீனப்படுத்தும்.
ரஷ்யாவின் படையெடுப்பிற்கு உக்ரைனின் கடுமையான எதிர்ப்பு தொடர்கிறது. இதன் காரணத்தினால் அதிபர் விளாடிமிர் புடின் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக அணு ஆயுதங்களைப் பயன்படுத்துவதற்கான அச்சுறுத்தல்களை விரைவில் விடுக்கலாம்.