ஜனாதிபதி ரணில் அதிகாரிகளுக்கு விடுத்துள்ள அதிரடி உத்தரவு!
நாட்டில் அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்துவதில் சுற்றறிக்கைகள் தடையாக இருப்பின், அவற்றை உடனடியாக திருத்துமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க (Ranil WIckremesinghe) அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இலங்கையில் முன்னெடுக்கப்படும் இந்திய முதலீட்டு அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து ஆராயும் கலந்துரையாடல், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் இன்றைய தினம் (09-09-2022) நடைபெற்றது.
இதன்போதே ஜனாதிபதி, அதிகாரிகளுக்கு இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.
இந்த கலந்துரையாடலில் இலங்கைக்கான இந்தியாவின் பிரதி உயர்ஸ்தானிகர் வினோத் ஜேக்கப்பும் கலந்துக்கொண்டுள்ளார்.
இதன்போது, இந்திய முதலீட்டில் முன்னெடுக்கப்படும் செயற்றிட்டங்களுக்கு தடையாகவுள்ள விடயங்களை கண்டறிந்து, அவற்றுக்கு உடனடி தீர்வு வழங்குமாறும் அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.