மீண்டும் உச்சம் தொடும் தங்கத்தின் விலை!
ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 அதிகரித்திருப்பது வாடிக்கையாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தொழில்துறை தேக்கத்தைத் தொடர்ந்து பங்குச்சந்தை, ரியல் எஸ்டேட், அமெரிக்க டாலர்கள் என பலவற்றில் இருந்த முதலீடுகளையும், பாதுகாப்பானதாக கருதப்படும் தங்கத்தில் முதலீடு செய்தனர்.
இதனால், தங்கத்தின் தேவை அதிகரித்து அதன் விலை உயர்ந்து வருகிறது. ஜனவரி மாதத்தின் தொடக்கத்தில் அதிகரித்து வந்த தங்கம் விலை, 2வது வாரத்தில் மளமளவென குறைய ஆரம்பத்தது.
இந்த நிலை அப்படியே மாறி, மீண்டும் உயரத் தொடங்கியிருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து, ரூ.37,528க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராம் தங்கம் ரூ.40 அதிகரித்து ரூ.4,691க்கு விற்பனையாகிறது. அதே போல் ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1.20 அதிகரித்து ரூ.72.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.72,500க்கு விற்பனை செய்யப்படுகிறது.