முணுமுணுத்த தகாத வார்த்தைகள் ஒலிவாங்கியில் ஒலித்ததால் அதிர்ச்சியடைத்த நியூசிலந்துப் பிரதமர்!
நியூசிலந்துப் பிரதமர் ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern) எதிர்க்கட்சி உறுப்பினரான டேவிட் செய்மரைத் (David Seymour) தகாத சொற்களால் திட்டியதற்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார்.
இன்றைய நாடாளுமன்ற விவாதத்தில் தவறு செய்ததற்கு மன்னிப்புக் கேட்டு, அதற்கேற்ற மாற்றங்களையும் நடைமுறைப்படுத்தியதற்கான உதாரணத்தை அளிக்கும்படி பிரதமர் ஆர்டனிடம் எதிர்க்கட்சி உறுப்பினரான செய்மர் கேள்வி எழுப்பினார்.
இந்நிலையில் "அகம்பாவம் பிடித்தவர்" என்று கூறித் தகாத வார்த்தைகளை பிரதமர் ஜசிண்டா ஆர்டன் முணுமுணுத்தார். அது ஒலிவாங்கியில் அவருக்குத் தெரியாமல் ஒலித்தது.
இதனையடுத்து நடந்த சம்பவத்துக்கு ஆர்டன் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதாக அவரின் அலுவலகம் தெரிவித்தது. பிரதமர் ஜசிண்டா ஆர்டன் 42 வயது ஆர்டன் 5 ஆண்டுகளாக நியூசிலந்தின் பிரதமராகப் பணியாற்றுகிறார்.
மேலும் அடுத்த ஆண்டு நியூசியந்தில் நடக்கவிருக்கும் தேர்தலில் ஆர்டனின் கட்சி குறைவான ஆதரவைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.