ரயில் நிலையத்தில் பயணிகளை ஆச்சரியப்படுத்திய பிரதமர் ரிஷி சுனக்(Video)
பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) வெஸ்ட்மின்ஸ்டர் நிலையத்தில் பாப்பிகளை (Poppies) விற்று பயணிகளை ஆச்சரியப்படுத்தினார்.
ராயல் பிரிட்டிஷ் லெஜியனின் (RBL) வருடாந்திர பாப்பி அப்பீலுக்கு பணம் திரட்ட, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக்,(Rishi Sunak) இராணுவ உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர் ஸ்டீபன் லு ரூக்ஸுடன் இணைந்து பாப்பிகளை விற்றார்.
வெஸ்ட்மின்ஸ்டர் நிலையத்திற்கு வியாழக்கிழமை காலை 8 மணிக்கு வந்த பிரதமர் ரிஷி சுனக்,(Rishi Sunak) தட்டில் நிரப்பபட்ட பாப்பிகளுடன் பயணிகளிடம் உரையாற்றினார்.
Bought my Poppy from Rishi and asked for a receipt @MahyarTousi pic.twitter.com/bQP8857Y0K
— Hard Cheese! (@SonOfTheWinds) November 3, 2022
ஊடகவியலாளர்கள் அழைக்கப்படாத இந்தச் சுருக்கமான நிகழ்வு தொடர்பான வீடியோ காட்சிகள் சில தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
பிரதமர் ரிஷி சுனக்(Rishi Sunak) இன்று காலை பணிக்கு செல்லும் போது வெஸ்ட்மின்ஸ்டர் நிலையத்தில் Poppy Legion-க்கு பாப்பிகளை விற்பதைப் பார்த்ததில் மகிழ்ச்சி என்று எம்.பி ஆண்ட்ரூ ஸ்டீபன்சன்(Andrew Stephenson) ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
ராயல் பிரிட்டிஷ் லெஜியன், எங்களுடன் பணம் சேகரிக்க தனது நேரத்தை தாராளமாக வழங்கியதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவிக்கிறோம் என கூறியுள்ளது.