பிரித்தானியாவில் சூடு பிடிக்கும் பிரதமர் போட்டி!
பிரித்தானியாவில் அடுத்த பிரதமர் யார் என்ற பரபரப்பு சூடுபிடித்திருக்கிறது.
இதற்கு முன்னர் பதவியில் இருந்த பிரதமர் போரிஸ் ஜோன்சன் (Boris Johnson)விடுமுறையைப் பாதியில் கைவிட்டு அவசரமாக நாடு திரும்பியிருக்கிறார்.
அவர் கரீபியத் தீவுகளுக்கு விடுமுறையில் போயிருந்தார்.
மூன்று மாதத்துக்கு முன்புதான் அவரது ஆளும் கான்சர்வேட்டிவ் கட்சியால் அவர் பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
போரிஸ் ஜான்சன் (Boris Johnson) நாடாளுமன்றத்தில் பொய் சொன்ன குற்றச்சாட்டை எதிர்நோக்குகிறார்.
அவர் மறுபடியும் பிரதமர் பொறுப்புக்கு வந்தால் பிரித்தானியாவில் ஒரே குளறுபடி ஏற்பட்டுவிடும் என்று அவரது கட்சியினர் சிலர் கூறுகின்றனர்.
போரிஸ் ஜோன்சனின் அரசாங்கத்தில் நிதியமைச்சராக இருந்த ரிஷி சுனாக்(Rishi Sunak) இப்போதைக்குப் போட்டியில் முதலிடத்தில் இருக்கிறார்.
நூறு நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருப்பதாகக் காட்ட வேண்டும். ரிஷி சுனாக்(Rishi Sunak) போதுமான ஆதரவை வைத்திருப்பதாகச் சொல்லப்படுகிறது.
போரிஸ் ஜான்சன் (Boris Johnson), திரு. ரிஷி சுனாக், முன்னைய தற்காப்பு அமைச்சர் பெனி மோர்டோண்ட் (Penny Mordaunt) ஆகியோரில் ஒருவர் பிரதமராகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.