இளவரசர் ஜார்ஜ் வந்தே ஆகவேண்டும் ; ராஜகுடும்ப ஆலோசகர்கள் வலியுறுத்து
பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்குக்கு, இளவரசர் வில்லியம் கேட் தம்பதிகளின் மூத்த மகனான இளவரசர் ஜார்ஜ் வந்தே ஆகவேண்டும் என ராஜகுடும்ப ஆலோசகர்கள் வலியுறுத்தியதாகசெய்தி வெளியாகியுள்ளது.
அதன் பின்னணியில் ஒரு முக்கிய காரணம் அமைந்துள்ளது.ராஜகுடும்பத்தைப் பொருத்தவரை, அதில் ஒவ்வொரு குழந்தை பிறக்கும்போதும், ஒவ்வொருவர் மரணமடையும்போதும் சில முக்கிய மாற்றங்கள் செய்யப்படுகின்றன.
தந்தைக்குப்பிறகு பிரித்தானிய மன்னராகும் வில்லியம்
மகாராணியார் மறைவுக்குப் பின் இளவரசர் சார்லஸ் மன்னராகியுள்ளதால், இளவரசர் வில்லியம் கேட் தம்பதியருக்கு மகனாக பிறந்த இளவரசர் ஜார்ஜ், தன் தந்தைக்குப்பிறகு பிரித்தானிய மன்னராகும் நிலையில் இருக்கிறார், அதாவது அடுத்து மன்னராக இருக்கும் நபர்கள் பட்டியலில், இரண்டாவது இடத்தில் இருக்கிறார் ஜார்ஜ்.
இந்த விடயத்தை, அதாவது இளவரசர் ஜார்ஜ்தான் இளவரசர் வில்லியமுக்கு அடுத்து மன்னராக இருப்பவர் என்பதை மக்களுக்கு அழுத்தம் திருத்தமாக ஒரு அடையாளமாக காட்டுவதற்காகவே, அவர் சிறு குழந்தையாக இருக்கும் நிலையிலும், அவர் பிரித்தானிய மகாராணியார் இரண்டாம் எலிசபெத்தின் இறுதிச்சடங்குக்கு வந்தே ஆகவேண்டும் என ராஜகுடும்ப ஆலோசகர்கள் வலியுறுத்தியுள்ளார்கள்.
அதைத் தொடர்ந்து ராஜ குடும்ப மூத்த உறுப்பினர்களின் ஆலோசனைக்குப்பின், இளவரசர் ஜார்ஜும், அவரது தங்கையான இளவரசி சார்லட்டும் மகாராணியாரின் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதேவேளை இளவரசி சார்லட், இளவரசர் ஜார்ஜுக்குப் பின் அரியணையேறும் நபராக தற்போது உள்ளது குறிப்பிடத்தக்கது.