மறுபிறவி குறித்து இளவரசர் ஹரி வெளியிட்ட தகவல்!
பிரித்தானிய இளவரசர் ஹரி மறுபிறவி மீது நம்பிக்கை கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
The Late Show நிகழ்ச்சியில் தோன்றிய 38 வயது பிரித்தானிய இளவரசர், தமது மறுபிறவியில் யானையாகப் பிறக்க விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
மனிதர்கள் இறக்கும்போது விலங்குகளாகப் பிறக்கின்றனர் என்று நம்புவதாக அவர் தெரிவித்துள்ளார். அவரது எதிர்காலம் எப்படி இருக்கும் என்று நிகழ்ச்சியில் கேட்கப்பட்டது.
எதிர்காலத்தை ஐந்தே வார்த்தைகளில் வருணிக்கும்படி நிகழ்ச்சி நிருபர் கேட்டுக்கொண்டார். அதற்கு இளவரசர் ஹரி “சுதந்திரம், மகிழ்ச்சி, தெளிவு, இடம், அன்பு” என்ற ஐந்து சொற்களை கூறியுள்ளார்.
இளவரசர் ஹரி பார்த்துப் பயப்படும் விலங்குகள் யாவை என்று கேட்டபோது அவர் பாம்பு, சுறா ஆகியவற்றைக் குறிப்பிட்டார்.
சுறாக்களைக் கடலில் மட்டுமே காணமுடியும், பாம்புகளை நிலத்திலும் காணமுடிவதால் தமக்குப் பாம்பென்றால் அதிகப் பயம் என்று இளவரசர் ஹரி கூறியுள்ளார்.