சகோதரர் அடித்ததாக குற்றம் சுமத்திய இளவரசர் ஹாரி; வெளியான அதிர்ச்சித் தகவல்!

United Kingdom Prince Harry Meghan Markle Prince William
By Sundaresan Jan 05, 2023 12:19 PM GMT
Report

தனது சகோதரர் வில்லியம்(Prince William) தன்னை அடித்து கீழே தள்ளி காயம் ஏற்படுத்தியதாக இளவரசர் ஹாரி(Prince Harry) அதிர்ச்சித் தகவல்களைப் பதிவு செய்துள்ளார்.

இங்கிலாந்து இளவரசர் ஹாரியின்(Prince Harry) சுயசரிதை புத்தகமான ‘ஸ்பேர்’ (Spare) இம்மாதம் 10-ம் திகதி வெளியாக இருக்கிறது. அதில், தனக்கு ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவங்கள் பலவற்றை பதிவிட்டுள்ளார்.

குறிப்பாக, மேகன் மார்கல் உடனான தனது காதலுக்கு இளவரசர் வில்லியம்(Prince William) எவ்வாறு எதிர்ப்பு தெரிவித்தார் என்பது குறித்தும், அவர் தன்னை தாக்கியது குறித்தும் ஹாரி(Prince Harry) அதில் குறிப்பிட்டுள்ளார்.

சகோதரர் அடித்ததாக குற்றம் சுமத்திய இளவரசர் ஹாரி; வெளியான அதிர்ச்சித் தகவல்! | Prince Harry Accused Of Beating Brother Shocking

அந்தப் புத்தகத்தில் இடம் பெற்றுள்ள முக்கிய தகவல்கள் சிலவற்றை ‘தி கார்டியன்’ நாளிதழ் வெளியிட்டுள்ளது. இதன்மூலம் உலகின் மிகப் பிரபலமான அரச குடும்பத்தில் நிகழ்ந்த மோசமான சம்பவங்கள் வெளியாகி உள்ளன.

''மேகன் மார்கலை நான் திருமணம் செய்து கொள்வதை வில்லியம் விரும்பவில்லை. கடினமானவர், முரட்டுத்தனமானவர், பாதிப்பை ஏற்படுத்தக் கூடியவர் என்றெல்லாம் மேகன் மார்க்லை வில்லியம்(Prince William) அழைத்தார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் எனது சட்டை காலரை பிடித்து இழுத்தார். நான் கழுத்தில் அணிந்திருந்த செயினை அறுத்தார். அப்படியே கீழே தள்ளினார். நாய்க்கு உணவு வைக்கும் பாத்திரத்தின் மீது போய் நான் விழுந்தேன்.

சகோதரர் அடித்ததாக குற்றம் சுமத்திய இளவரசர் ஹாரி; வெளியான அதிர்ச்சித் தகவல்! | Prince Harry Accused Of Beating Brother Shocking

அந்தப் பாத்திரம் எனது முதுகில் கீரிவிட்டது. சிறிது நேரம் நான் அப்படியே படுத்துக் கிடந்தேன். அதன்பிறகு எழுந்து, அவரை வெளியே போகச் சொன்னேன். இவை எல்லாமே மிக வேகமாக நடந்து முடிந்தன.

இந்தச் சம்பவத்தால் எனக்கு முதுகில் ஏற்பட்ட காயங்கள் குறித்து நான், என் மனைவி மேகன் மார்க்லிடம் தெரிவிக்கவில்லை. ஆனால், அவர் இதை கவனித்துவிட்டு மிகவும் வேதனைப்பட்டார்'' என்று ஹாரி தெரிவித்துள்ளார்.

மேகன் மார்கல் உடனான திருமணத்தை அடுத்து கடந்த 2020-ல் அரச குடும்பத்து பொறுப்புகளில் இருந்து விலகிய ஹாரி(Prince Harry), அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் குடிபெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.  

5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, நந்தாவில்

12 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, யாழ்ப்பாணம், சுழிபுரம், Bobigny, France

21 Sep, 2025
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, Markham, Canada

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், Richmond Hill, Canada

07 Oct, 2026
மரண அறிவித்தல்

Tellipallai, கொழும்பு, யாழ்ப்பாணம், வவுனியா, Ontario, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்புத்துறை மேற்கு, சென்னை, India

23 Sep, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வல்வெட்டி, Toronto, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US