மக்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்த இளவரசர் ஹரி
பிரித்தானிய இளவரசரான ஹரி , மேகன் மெர்க்கல் (Harry, Megan Merkel) என்னும் அமெரிக்க நடிகையினை பல தடைகளை தாண்டி காதலித்து திருமணம் செய்தார். இதற்கு ராஜ குடும்பத்தினர் உள்ள அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் ஹரி மேகன் தம்பதிகள் ராஜகுடும்பத்தை விட்டு பிரிந்தனர்.
இதனால் ராஜ குடும்பத்தில் உள்ள அனைவரும் ஹரியின் மீது கோபம் அடைந்தபோதும் மகாராணியார் மட்டும் இளவரசர் ஹரியின் குடும்பத்தை மனதார வாழ்த்தியுள்ளார். இதனையடுத்து இளவரசர் பிலிப் மறைவிற்கு மீண்டும் குடும்பத்தை உறுப்பினர்களை சந்திக்கும் கட்டாயம் இளவரசர் ஹரிக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் இளவரசர் ஹரி ராஜ குடும்பத்தில் இணைய வேண்டும் பிரித்தானிய மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். இதனைத்தொடர்ந்து தாத்தாவின் இறுதிசடங்கு முடிந்த பின் இளவரசர் ஹரி தன் தந்தை மற்றும் சகோதரருடன் நன்றாக பேசியுள்ளார்.
இந்தநிலையில் இளவரசர் ஹரி குடும்பத்தில் இணைந்து விடுவார் என குடும்ப வட்டாரங்கள் எதிர்பார்த்த நிலையில் ஹரி மகாராணியரிடம் பேசாமலேயே அமெரிக்காவிற்கு சென்றுவிட்டதாக தெரிவிக்கப்பட்டுகின்றமை பிரித்தானிய மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.