இளவரசி மேகனை முறைத்து பார்த்த இளவரசி கேட்!
ராணி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தைத் தொடர்ந்து, வின்ட்சர் கோட்டைக்கு வெளியே அரச குடும்பத்துடன் துக்க அனுசரிப்பிற்காக கூடியிருந்த மக்களை இளவரசர் வில்லியம்(Prince William), இளவரசி கேட்(Catherine), இளவரசர் ஹரி(Prince Harry) மற்றும் இளவரசி மேகன்(Meghan) ஆகியோர் சந்தித்தனர்.
அப்போது, மேகன் மார்க்கல் மீது கேட் மிடில்டன் வீசிய ஒரு 'icy-glare' பார்வையை, உடல் மொழி வல்லுநர்கள் எடைபோடுகின்றனர்.
இந்த பார்வைக்கு ஒரு வித கோபமான, கடினமான மற்றும் நட்பற்ற பார்வை என குறிப்பிடுகின்றனர்.
இப்படியொரு பார்வையை மேகன் (Meghan) மீது வீசியபோது கேட் கேமராவில் சிக்கினார். விவாதித்தை ஏற்படுத்தக்கூடிய இந்த மோசமான தருணத்தில், வேல்ஸ் இளவரசி மற்றும் சசெக்ஸ் டச்சஸ் இடையே ஒளிந்திருக்கும் பனிப்போர் பற்றி உடல் மொழி வல்லுநர்கள் விரைவாக எடைபோட்டனர்.
சமூக வலைத்தளங்களில் வெளியான வீடியோவில், கடந்த வார இறுதியில் வின்ட்சர் கோட்டைக்கு வெளியே மேகனை கேட் ஒரு வெறுப்புணர்வுடன் பார்த்திருப்பார், அதனை முழுமையாக வெளிப்படுத்தும் முன் தன்னை கமெராக்கள் படம்பிடிப்பதை உணர்ந்து, அடுத்த நொடி சிரித்துக் கொண்டே கூட்டத்தை நோக்கி கை அசைத்துள்ளார்.
இந்த வீடியோ வைரலானது. உடல் மொழி நிபுணர் கட்டியா லோய்சல்(Katia Loisal), மேகனை "உறைய வைக்க" கேட் இதைச் செய்ததாக உறுதியாக கூறுகிறார்.
மேலும் அவர் கூறுகையில், "எங்களுக்குத் தெரிந்த நம்பிக்கையான மேகனைப் போலல்லாமல், இந்த சந்திப்பின் போது மேகன் உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். பல சமயங்களில் மேகன் கேட்டைப் பார்த்தார், இருப்பினும், கேட்டின் பார்வை திருப்பிச் செலுத்தப்படவில்லை.
பதிலாக, கேட் மேகன் மீது ஒரு கடுமையான பார்வையை வீசினார்" என்றார். மேகனை அசௌகரியமாக உணரவைப்பதில் கேட் வெற்றி பெற்றதாக தான் நம்புவதாக லோயிஸ் கூறினார்.
மற்றொரு உடல்மொழி நிபுணர் Judi James, கேட் மற்றும் அவரது கணவர் இளவரசர் வில்லியம் மேகன் (Meghan) மற்றும் இளவரசர் ஹரியுடன் பழகுவதற்கு சிரமப்படுகிறார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது என்று கூறினார்.
"இங்கே நிதானமான நிச்சயதார்த்தம் அல்லது பாசத்தின் அறிகுறிகள் எதுவும் இல்லை, ஆனால் அவர்கள் ஒன்றாக அணிவகுத்து மீண்டும் தொடர்புகொள்வது சுவாரஸ்யமாக இருக்கிறது" என்று உடல் மொழி நிபுணர் ஜூடி ஜேம்ஸ் குறிப்பிட்டார்.