தென் கொரியா சுற்றுலாத்துறை தூதராக நடிகை பிரியங்கா மோகன் நியமனம்
தென்னிந்திய திரைப்படத் துறையின் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கும் பிரியங்கா மோகன், தென் கொரிய சுற்றுலாத்துறையின் கௌரவ தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் நடித்த ‘டாக்டர்’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்ற பிரியங்கா மோகன், பின்னர் ‘டான்’, ‘கேப்டன் மில்லர்’ உள்ளிட்ட பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக உயர்ந்தார்.

இந்நிலையில், ‘நித்தம் ஒரு வானம்’ திரைப்படத்தின் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் பிரியங்கா மோகன் நடித்த ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் கடந்த மார்ச் 12 ஆம் திகதி நேரடியாக நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியிடப்பட்டது.
ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற இந்த திரைப்படம், இந்தியா – தென் கொரியா கலாச்சார தொடர்புகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஏப்ரல் மாதம் இந்தியாவிற்கு அரசு முறைப் பயணமாக வந்திருந்த தென் கொரிய ஜனாதிபதிக்கு ஜனாதிபதி மாளிகையில் வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ விருந்திலும் பிரியங்கா மோகன் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தார்.
அப்போது அவர் தென் கொரிய ஜனாதிபதியையும் சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இந்த நிலையில், ‘மேட் இன் கொரியா’ திரைப்படத்தின் மூலம் தென் கொரிய கலாச்சாரம் மற்றும் சுற்றுலாத்துறைக்கு வழங்கிய பங்களிப்பை பாராட்டும் வகையில், பிரியங்கா மோகனை தென் கொரிய சுற்றுலாத்துறையின் கௌரவ தூதராக அந்நாட்டு அரசு நியமித்துள்ளது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் சமூக ஊடகங்கள் ஊடாக பிரியங்கா மோகனுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
Beyond grateful for this incredible honour 🇰🇷✨
— Priyanka Mohan (@priyankaamohan) June 1, 2026
Being appointed as the Honorary Ambassador for Korea Tourism is truly very special to me. I’m sincerely thankful to the Korean government and the Korea Tourism Organization for recognising me as someone who can help bring Korean… pic.twitter.com/Rpf0kUftHS