உக்ரைன் - ரஷ்யா போர்: நாட்டுக்காக உயிர் தியாகம் செய்த கதாநாயகன்
உக்ரைனுடன் ரஷ்யா போர் தொடங்கி 14 நாட்கள் ஆகிறது. 18 வயது முதல் 60 வயது வரை உள்ள ஆண்கள் ராணுவத்தில் சேர்ந்து நாட்டைப் பாதுகாக்கலாம் என்று உக்ரைன் அதிபர் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, ஆயிரக்கணக்கானோர் ராணுவத்தில் சேர்ந்து ரஷ்ய படைகளுடன் போரிட்டனர். உக்ரைன் நடிகர் பாஷா லீ(Pasha Lee) கடந்த வாரம் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்தார். இதனிடையே, தனது நாட்டை காக்கும் போது ரஷ்ய படைகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் நடிகர் பாஷா லீ(Pasha Lee) கடந்த 6ம் திகதி உயிர் தியாகம் செய்தார்.
பாஷா லீ (Pasha Lee) 2016 இல் ஆக்ஷன்-காமெடி படமான செல்ஃபி பார்ட்டி(Selfie Party) மற்றும் ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் படமான தி ஃபைட் ரூல்ஸ் (The Fight Rules)ஆகியவற்றில் புகழ் பெற்றார். நடிப்பைத் தவிர, பிரபலமான உக்ரேனிய பொழுதுபோக்கு நிகழ்ச்சியான ‘டே அட் ஹோம்’(Day at Home) நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கினார்.
நடிப்புடன், டப்பிங், பாடல் எழுதுதல், இசை என பல துறைகளிலும் பெயர் எடுத்தார்.
கடந்த சனிக்கிழமையன்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாஷா லீ(Pasha Lee) வெளியிட்டுள்ள பதிவில், கடந்த 48 மணி நேரத்தில் ரஷ்ய ராணுவத்தில் நமது வீரர்கள் எப்படி சண்டையிட்டார்கள் என்பதை நேரில் பார்த்தார். உக்ரைனுக்காக தொடர்ந்து போராடுவேன் என பதிவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.