பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் வீட்டுக்கு தீ வைத்த போராட்டக்காரர்கள்!
பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் குல்னா பிரிவில் உள்ள நரைல்-2 தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான மஷ்ரஃபே மோர்தசாவின் வீட்டுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.
இச்சம்பவம் நேற்றையதினம் (06-08-2024) இடம்பெற்றுள்ளது.
2024ம் ஆண்டு தொடக்கத்தில் பங்களாதேஷில் நடைபெற்ற பொதுத் தேர்தலின் போது ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சியின் வேட்பாளராக தேர்தலில் போட்டியிட்டு, தொடர்ந்து இரண்டாவது முறை எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.
இவர் பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் தலைவராக இருந்தபோது 117 போட்டிகளுக்கு தலைமை தாங்கியிருக்கிறார்.
இவரின் கிரிக்கெட் வாழ்க்கையில், 390 விக்கெட்களை வீழ்த்தி, 2,955 ஓட்டங்களை எடுத்திருக்கிறார்.
கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, ஷேக் ஹசீனாவின் அவாமி லீக்கில் சேர்ந்து 2018-ல் அரசியலில் நுழைந்தார். அப்போது முதல் எம்.பி-யாக தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.