தீயிட்டு கொழுத்தப்பட்ட நாடாளுமன்றம் ; பற்றி எரியும் இந்தோனேசியா
இந்தோனேசியாவில் போராட்டக்காரர்கள் நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு வைத்த தீயில் சிக்கி மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தீயில் இருந்து தப்பிக்க முயன்றபோது மேலும் ஐந்து பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணீர் புகை குண்டுகள்
இந்தோனேசிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசாங்கத்தின் சம்பளத்திற்கு எதிராக அந்நாட்டு மக்கள் தலைநகர் ஜகார்த்தாவில் இந்த வார தொடக்கத்தில் இருந்து போராட்டம் நடத்தி வருகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை போராட்டத்தின் போது நாடாளுமன்றத்தில் இருந்து அலுவலக உபகரணங்களையும் போராட்டக்காரர்கள் சூறையாடியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
போராட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.