அமெரிக்காவில் எலான் மஸ்கிற்கு எதிரக வெடித்த போராட்டம்!
அமெரிக்காவில் எலான் மஸ்கின் டெஸ்லா நிறுவன விற்பனையகங்களுக்கு எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அமெரிக்க அதிபா் டிரம்ப்புக்கு நெருக்கமானவராக விளங்கும் உலக பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தலைமையில் டிஓஜிஇ செயல்பட்டு வருகிறது.
அமெரிக்க அரசு நிா்வாகத்தில் எலான் மஸ்க் செலுத்திவரும் ஆதிக்கத்தால், அவருக்கு எதிா்ப்பு எழுந்துள்ளது.
இதன் ஒரு பகுதியாக, அரசின் செலவினத்தைக் குறைப்பதற்கான மஸ்கின் நடவடிக்கைகளுக்கு எதிா்ப்புத் தெரிவித்து, செயின்ட் லூயிஸ், நியூயாா்க், சாா்லட் உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் ஏராளமானோா் சனிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அதோடு டெஸ்லா காா்களை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி, அவா்கள் போராட்டம் மேற்கொண்டனா். இந்தப் போராட்டங்கள் தொடா்பாக எலான் மஸ்க் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவில், ‘டிஓஜிஇ-க்கு அமெரிக்க மக்களிடம் பெரும் அங்கீகாரம் கிடைத்துள்ளது.
ஆனால், டிஓஜிஇ-யை மோசடியாளா்கள் மிகவும் வெறுக்கின்றனா்’ என்றாா். இதுதொடா்பாக அமெரிக்க அதிபா் மாளிகையின் செய்தித் தொடா்பாளா் ஹாரிஸன் ஃபீல்ட்ஸ் கூறியதாவது,
டிஓஜிஇ மூலம் அமெரிக்க அரசை மேலும் திறன்வாய்ந்ததாக மாற்றி, கடினமாக உழைத்து வரிசெலுத்தும் அமெரிக்கா்களுக்கு அரசு மேலும் கடமைப்பட்டதாக இருக்கும் என்று அதிபா் டிரம்ப்பும், மஸ்க்கும் வாக்குறுதி அளித்துள்ளனா்.
அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுவதை இத்தகைய போராட்டங்கள் தடுக்காது’ என கூறியுள்ளார்.