இலங்கையில் டொலர்களில் வீடுகளைக் கொள்வனவு செய்வோருக்கு சலுகை
வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு டொலர்களில் பணம் செலுத்தி அந்தந்த வீடுகளை கொள்வனவு செய்வதற்குத் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நிர்மாணிக்கப்படும் நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களில் அமெரிக்க டொலர்களில் வீடுகளைக் கொள்வனவு செய்வோருக்கு பத்து வீதச் சலுகை வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவும் டொலர் நெருக்கடிக்கு தீர்வாக இந்தப் புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதுவரை முடிக்கப்பட்டுள்ள மனைகள்
இதுபோன்ற இரண்டு நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்களின் பணிகள் இதுவரை முடிக்கப்பட்டுள்ளன. பொரளையில் 608 வீடுகளும் அங்கொடையில் 500 வீடுகளும் உள்ளன.
மேலும் 3,667 வீட்டு மனைகளைக் கொண்ட 12 நடுத்தர வருமான வீட்டுத் திட்டங்கள் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.