கனடாவில் புயல் குறித்து எச்சரிக்கை
கனடாவில் மிகப் பாரியளவில் புயல் காற்றுத் தாக்கும் சாத்தியங்கள் காணப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடாவின் நான்கு மாகாணங்களில் இந்த புயல் காற்றின் தாக்கத்தை உணர முடியும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
தென் சஸ்கட்ச்வான், மானிடோபா, ஒன்றாரியோ மற்றும் கியூபெக் ஆகிய மாகாணங்களில் புயல் காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் புயல் காற்று உச்ச நிலையில் இருக்கும் போது மூவாயிரம் கிலோ மீற்றர் வரையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த புயல் காற்று இந்த வார ஆரம்பத்தில் உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த புயல் காற்றினால் தென் மானிடோபா பகுதி கூடுதலாக பாதிக்கப்படும் என வானிலை ஆய்வாளர் டெரி லாங் தெரிவித்துள்ளார்.
மானிடோபா மற்றும் சஸ்கட்ச்வானில் ஏற்கனவே கூடுதல் அளவில் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில், புயல் காற்று இந்த நிலையை மேலும் அதிகரிக்கும் என தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் மையம் கொண்டுள்ள புயல் கனடாவின் சில மாகாணங்களையும் கடந்து செல்லும் என தெரிவிக்கப்படுகின்றது.