பிரான்ஸில் தீவிரமடையும் மக்கள் போராட்டம் ; 2,000க்கும் மேற்பட்டோர் கைது
பிரான்ஸில் வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மற்றும் பொதுச் சேவைகள் தொடர்பாக முன்னெடுக்கப்பட்ட போராட்டங்கள் வன்முறைக் கலவரங்களாக மாறியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த வன்முறைகளால் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அத்துடன், நூற்றுக்கணக்கான காவல்துறை அதிகாரிகள் காயமடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தக் கலவரங்களின்போது, லிமோஜ் நகரிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரசபைக் கட்டடம் தீக்கிரையாக்கப்பட்டதுடன், பல வர்த்தக நிலையங்களும் களவாடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிரான்ஸில் பல்வேறு நகரங்களில் வன்முறைக் குழுக்களுக்கும் காவல்துறைக்கும் இடையில் மோதல்களும் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் 2027ஆம் ஆண்டு தேர்தல்கள் நெருங்கும் நிலையில், வன்முறை சம்பவங்களினால் பிரான்ஸில் சமூகப் பதற்றம் அதிகரித்துள்ளது.
இந்தநிலையில், ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ளதாக, பிரான்ஸ் ஜனாதிபதி அலுவலகம் தெரிவித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.