விமான நிலைய கழிப்பறையில் கைவிடப்பட்ட நாய்க்குட்டி; உருகவைக்கும் கடிதம்
அழகான நாய்க்குட்டியை விமான நிலைய கழிப்பறையில் விட்டுவிட்டு உருக்கமான கடிதத்தை ஒன்றினையும் நாயின் உரிமையாளர் அதனுடனே வைத்துவிட்டு சென்ற சம்பவம் ஒன்று அமெரிக்க்காவில் இடம்பெற்றுள்ளது.
அமெரிக்காவில் நடந்த இந்த சம்பவம் தொடர்பான கடிதம்தான் தற்போது சமூக வலைதளங்களில் இணையவாசிகளின் கவனத்தை பெற்றுள்ளது. ச்சூவி என பெயரிடப்பட்டிருக்கும் பிறந்து மூன்று மாதமே ஆன நாய்க்குட்டியைதான் அதன் உரிமையாளரான பெண் கைவிட்டுள்ளார்.
நாயுடன் அவர் விட்டுச் சென்ற அந்த கடிதத்தில்
“ஹாய், நான் ச்சூவி. என்னோட உரிமையாளர் ஒரு கொடுமையான உறவில் சிக்கியிருக்கிறார். அவரால் என்னை விமானத்தில் கொண்டுச் செல்ல முடியாமல் போனது. ஆனால் அவருக்கு என்னை விட்டு பிரிய மனமில்லை. இருப்பினும் என்னை விட்டு போவதை தவிர அவருக்கு வேறு வழியும் இல்லை எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன் தயவுசெய்து ச்சூவியை நன்றாக பார்த்துக்கொள்ளுங்கள்” எனவும் நாய்க்குட்டியின் உரிமையாளர் அந்தக் கடிதத்தில் கோரியிருந்தார்.
இந்நிலையில் விமான நிலைய கழிவறையில் விடப்பட்ட ச்சூவி நாய்க்குட்டியை கண்ட பெண் ஒருவர் அதனை மீட்டு லாஸ் வேகாஸில் உள்ள லிண்டியா கில்லியம் என்பவரின் நாய் மீட்பு அமைப்பில் ஒப்படைத்துள்ளாராம்.