புட்டின் மற்றும் அதிபர் இமானுவெல் காரசார பேச்சு!
ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் (Vladimir Putin) பிரெஞ்சு அதிபர் இமானுவெல் மக்ரோனும் (Emmanuel Macron) தொலைபேசியில் காரசாரமான கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்போது உக்ரேனில் உள்ள ஸப்போரிஸியா (Zaporizhzhia) அணுவாலையின் பாதுகாப்புப் பற்றி அவர்கள் ஒருவரையொருவர் குறைகூறியதாகவும் கூறப்படுகின்றது.
அணுவாலையின் நிலைமைக்கு ரஷ்யப் படையினர்தான் காரணம் என்று பிரான்ஸ் அதிபர் மக்ரோன் (Emmanuel Macron) கூறியிருந்தார்.
புட்டின் எச்சரிக்கை
உக்ரேனியப் படையினர் அணுவாலையைத் தாக்கினால் அங்கு பேரழிவை ஏற்படுத்தக்கூடிய பின்விளைவுகளைச் சந்திக்கக்கூடும் என்று ரஷ்ய புட்டின் (Vladimir Putin) எச்சரித்தார்.
கதிரியக்கக் கழிவுகளைக் கொண்ட கிடங்கு ஒன்றும் அதில் அடங்கும் என்று அவர் குறிப்பிட்டார். ஸப்போரிஸியா (Zaporizhzhia) அணுவாலையின் கடைசி மின்சார உலை நேற்று (11 செப்டம்பர்) மூடப்பட்டதைத் தொடர்ந்து அந்தத் தொலைபேசி உரையாடல் இடம்பெற்றது.
அதேசமயம் பாதுகாப்பு நடவடிக்கையாய் அது மூடப்பட்டதாக உக்ரேனின் அணுச்சக்தி மின்சார ஆணையம் தெரிவித்தது.
இவ்வாறான நிலையில் அதிபர் மக்ரோன் (Emmanuel Macron) அணுவாலை தொடர்பான பாதுகாப்புக் குறித்து ஓர் இணக்கம் எட்டப்படும்வரை ரஷ்ய அதிபர் புட்டினுடனும் (Vladimir Putin) அனைத்துலக அணுவாயுத ஆணையத்தின் தலைமைச் செயலாளருடனும் தொடர்ந்து பேசவிருப்பதாகக் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.