கனடிய குடும்பத்தின் பாராட்டத்தக்க முயற்சி
கனடாவின் கியூபெக் மாகாணத்தைச் சேர்ந்த குடும்பம் ஒன்று கார்பன் வெளியீட்டை தவிர்க்கும் வகையிலான வாழ்க்கை முறையை பின்பற்றுவதற்கு முனைப்பு காட்டி வருகின்றது.
கார்பன் வெளியீட்டை குறைக்கும் தேசிய ரீதியிலான போட்டியின் இறுதிப் போட்டியாளர் பட்டியலில் இந்த ப்ரோலெக்ஸ் குடும்பமும் இடம்பெற்றுள்ளது.
50000 டாலர் பெறுமதியான முதல் பரிசிற்காக இந்தக் குடும்பத்துடன் மேலும் 7 குடும்பங்கள் போட்டியிடுகின்றன.
ஐந்து பேரைக் கொண்ட ப்ரோலெக்ஸ் குடும்பம் சுற்றுச்சூழல் தொடர்பில் அதிக கரிசனையுடைய குடும்பம் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த குடும்பத்தைச் சேர்ந்த பிள்ளைகள் சைக்கிளில் பாடசாலைக்கு செல்வதாகவும் இலத்திரனியல் வாகனங்களையே இந்த குடும்பம் பயன்படுத்துவதாகவும், முடிந்த அளவு கார்பன் வெளியீட்டை குறைக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.