கியூபெக் மாகாண மக்கள்தொகை குறையும் என மதிப்பீடு
கனடாவின் கியூபெக் மாகாணத்தின் மக்கள்தொகை குறையும் என மதிப்பிட்டுள்ளது.
2030ஆம் ஆண்டளவில் மாகாணத்தின் சனத் தொகை 80,000 ஆல் குறையும் என புள்ளி விபரவியல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தற்காலிக குடியேறிகளின் எண்ணிக்கையைக் குறைக்க அண்மையில் அரசு கொண்டுவந்த கொள்கைகள் உள்ளிட்ட பல காரணிகளால் மக்கள்தொகை குறையும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
பிறப்பு விகிதங்கள் மற்றும் சர்வதேச குடியேற்றப் போக்குகளை அடிப்படையாகக் கொண்டு இந்த மதிப்பீடுகள் உருவாக்கப்பட்டதாகவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
2024ஆம் ஆண்டில் கியூபெக் மாகாணத்தின் மக்கள்தொகை சுமார் 9.1 மில்லியனாக இருந்ததாக அந்த நிறுவனம் கணக்கிட்டுள்ளது.
எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை 9.2 மில்லியனாக காணப்படும் எனவும் இது கணித்துள்ளது.
2021 முதல் 2051 வரையிலான காலகட்டத்தில் கியூபெக் நகரப் பகுதியின் மக்கள்தொகை அதிக அளவில் வளர்ச்சியடையும் எனவும், அதே காலகட்டத்தில் மொன்ட்ரியல் பகுதியின் மக்கள்தொகை குறையும் எனவும் நிறுவனம் கூறியுள்ளது.
கியூபெக் நகரப் பகுதியின் மக்கள்தொகை 21 சதவீதம் வளர்ச்சியடையும் எனவும், மொன்ட்ரியல் பகுதியின் மக்கள்தொகை 4.5 சதவீதம் குறையும் எனவும் ஆராய்ச்சியாளர்கள் மதிப்பிட்டுள்ளனர்.