அமெரிக்க புதிய ஜனாதிபதி ட்ரம்பை சந்தித்த கியூபெக் முதல்வர்!
கனடாவின் கியூபெக் மாகாண முதல்வர் பிரான்கோயிஸ் லெகுலாட் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் செலென்ஸ்கீ மற்றும் உலக செல்வந்தர்களில் ஒருவரான எலொன் மஸ்க் ஆகியோரை சந்தித்துள்ளார்.
அண்மையில் அவர் மேற்கொண்ட பிரான்ஸ் விஜயத்தின் போது இவ்வாறு முக்கியஸ்தர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அமெரிக்க எல்லை பகுதி பாதுகாப்பு மற்றும் வரிவிதிப்பு போன்ற விவகாரங்கள் குறித்து டொனால்ட் ட்ரம்ப் இடம் கருத்துக்களை பரிமாறியதாக தெரிவிக்கப்படுகிறது.
உக்ரேனுக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கப்படும் என கியூபிக் முதல்வர் தெரிவித்துள்ளார்.
போர் முடிவடையும் வரையில் இந்த ஆதரவு தொடரும் என அவர் உக்கிரன் ஜனாதிபதியிடம் உறுதி வழங்கியுள்ளார்.
எலொன் மஸ்குடன் சர்வதேச வர்த்தகம் மற்றும் இலத்திரனியல் வாகனம் போன்றன தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தியதாக லகுலாட் தெரிவித்துள்ளார்.