கனடாவில் சட்டத்தரணி என போலியாக வேடமிட்ட பெண் கைது
கனடாவின் கியூபெக் மாகாணத்தில் தன்னை சட்டத்தரணி என போலியாக அடையாளப்படுத்திக் கொண்ட பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சில வாரங்களாக குறித்த பெண் பொலிஸாரால் பிறப்பிக்கப்பட்ட பிடிவிராந்து உத்தரவினை இந்தப் பெண் தவிர்த்து வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மெகன் லாலொன்டெ என்ற பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 8ம் திகதி நீதிமன்றில் முன்னிலை ஆகுமாறு குறித்த பெண்ணுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும் குறித்த பெண் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய செயற்படத் தவறியதாக தெரிவிக்கப்படுகிறது.
டிக் டாக், இன்ஸ்டாகிராம் போன்ற பல்வேறு சமூக ஊடகங்களில் தன்னை ஒரு சட்டத்தரணி என அடையாளப்படுத்திக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
எவ்வாறெனிலும் இந்த பெண் சட்டத்தரணியாக செயல்படுவதற்கு அதிகாரம் வழங்கப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 18ஆம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரையிலான காலப் பகுதிக்குள் குறித்த பெண் சட்டத்தரணியாக தம்மை அடையாளப்படுத்தியதாக என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு குறித்த பெண்ணுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும், குறித்த பெண் நீதிமன்ற உத்தரவிற்கு அமைய நீதிமன்றத்தில் முன்னிலையாக தவறியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.