கனடாவில் மக்கள் மகிழ்ச்சியாக வாழும் மாகாணம்
கனடாவின் புகழ்பெற்ற ஆய்வுக் குழுவான லெஜர் Leger நடத்திய புதிய இணைய கருத்துக்கணிப்பில், கியுபெக் மாகாண மக்கள் தான் நாட்டில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பவர்கள் என்று தெரியவந்துள்ளது.
இந்த ஆய்வில் மொத்தம் 39,841 கனடியர்கள் பங்கேற்றனர். அவர்களிடையே மகிழ்ச்சித் தரம் 100-ல் சராசரி 72.4 எனக் கணிக்கப்பட்டு, இது தேசிய சராசரி 68.7-ஐ விட சற்று உயர்ந்த அளவில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கியூபெக் – 72.4 புள்ளிகளையும், நியூ ப்ரன்ஸ்விக் – 70.2 புள்ளிகளையும் பெற்றுக்கொண்டு முன்னிலை வகிக்கின்றன.
அதற்கு அடுத்தபடியாக நியூஃபவுண்லாந்து & லாப்ரடோர், சாஸ்கட்சுவான், நோவா ஸ்கோஷியா மாகாணங்கள் காணப்படுகின்றன.
நகரங்களின் வரிசையில் மிஸிசாகா (ஒன்டாரியோ) உயர்ந்த மகிழ்ச்சித்தரத்துடன் முதலிடத்திலும், மொன்ட்ரியால் இரண்டாவது இடத்திலும், டொரோண்டோ கடைசி இடத்திலும் காணப்படுகின்றன.