நியூஸிலாந்து பிரதமருக்குக் ராணி எலிசபெத் கூறிய அறிவுரை
ஒரு பக்கம் நாட்டின் தலைவர் பொறுப்பு.. இன்னொரு பக்கம் தாயின் கடமைகள்... என்ன செய்வது என திணறிய நியூஸிலந்துப் பிரதமரிடம் "இரண்டையும் செய்யவேண்டியதுதான்..." என எலிசபெத் அரசியார் தம்மிடம் கூறியதாக ஜசிண்டா ஆர்டன் (Jacinda Ardern) தெரிவித்துள்ளார்.
அதுவே அரசியார் தமக்குச் சொன்ன சிறந்த அறிவுரை என்றும் பிரதமர் அவர் குறிப்பிட்டார்.
2018ஆம் ஆண்டு நியூஸிலந்துப் பிரதமர் பொறுப்பில் இருந்தபோது பிரதமர் ஆர்டனுக்கு(Jacinda Ardern) குழந்தை பிறந்திருந்தது.
அவர் முதல்முறை எலிசபெத் அரசியாரைச் சந்தித்தபோது கர்ப்பமாக இருந்தார். அதேசமயம் எலிசபெத் அரசியார் ஆட்சிக்கு வரும் முன்பு இரு பிள்ளைகளும் அரசியாக பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்பு இரு பிள்ளைகளும் பெற்றெடுத்திருந்தார்.
இந்நிலையில் எப்படி அனைத்தையும் சமாளித்தீர்கள் என்று பிரதமர் ஆர்டன் (Jacinda Ardern) கேட்டதற்கு "well, you just get on with it", அதாவது செய்யவேண்டியதுதான் என்று அரசியார் பதிலளித்ததாகத் திருவாட்டி ஆர்டன் குறிப்பிட்டார்.
ஒரு தாயாகவும் தலைவராகவும் இருக்க என்ன தேவை என்பதை இப்போது உணர்வதாகவும் அரசியார் மீது மிகுந்த மரியாதை இருப்பதாகவும் நியூஸிலாந்து பிரதமர் (Jacinda Ardern) கூறியுள்ளார்.