மொத்த நாடே இறுதிச்சடங்கிற்கு தயாராக... ராணியின் விருப்பமான மதுபானம் விற்பனையில் உச்சம்
மொத்த பிரித்தானியாவும் ராணியாரின் இறுதிச்சடங்குக்கு தயாராகி வந்தபோது, அவரது விருப்ப மதுபானமானது பல்பொருள் அங்காடிகளில் விற்றுத்தீர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராணியாருக்கு மிகவும் விருப்பமான மதுபானமாக Dubonnet மற்றும் gin ஆகியவற்றின் கலவையை குறிப்பிட்டுள்ளார். ஆனால், ராணியாரின் நினைவாக பொதுமக்களில் பலர் தொடர்புடைய மதுபானத்தை அதிகமாக வாங்கியுள்ளனர்.
Dubonnet என்பது பிரான்சில் தயாரிக்கப்படும் திராட்சை மதுவகையை சேர்ந்தது. டெஸ்கோ இணைய பக்கத்தில் குறித்த மதுபானமானது தற்போது கையிருப்பு இல்லை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, இன்னொரு இணைய பக்கத்திலும் குறித்த மதுபானம் கையிருப்பு இல்லை என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த வாரம் பிபிசி செய்தியாளர் ஒருவர் குறிப்பிடுகையில், குறித்த மதுபானமானது பல்பொருள் அங்காடிகளில் விற்றுத்தீர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், ஜூன் மாதம் ராணியின் பிளாட்டினம் விழாவை நாடு கொண்டாடியபோதும் குறித்த மதுபானம் விற்றுத் தீர்ந்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.