ராணியாரின் இறுதிச் சடங்கு... அமெரிக்க ஜனாதிபதி வருகை
ராணியாரின் இறுதிச் சடங்கிற்கு முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இங்கிலாந்து வந்தடைந்தார்.
பிரிட்டன் ராணியாரின் இறுச்சடங்கிற்காக சுமார் 500க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதில் ரஷ்யா, சிரியா உட்பட 6 நாடுகளுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இந்த நிலையில் உள்ளூர் நேரப்படி இரவு 10.30 மணிக்கு அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் இங்கிலாந்து வந்தடைந்தார்.
மட்டுமின்றி, ராஜகுடும்ப உறுப்பினர்களையும் மன்னர் மூன்றாம் சார்லஸையும் ஜோ பைடன் சந்திக்க இருக்கிறார்.
திங்கட்கிழமை வெஸ்ட்மின்ஸ்டர் குரு மடாலயத்தில் நடைபெறும் இறுதிச் சடங்கில் அவர் உலகம் முழுவதிலுமிருந்து வரும் ஜனாதிபதிகள், பிரதமர்கள் மற்றும் அரச குடும்ப உறுப்பினர்களுடன் இணைவார் என்றே கூறப்படுகிறது.
மேலும், 400 பேர்கள் கொண்ட பாதுகாப்பு அதிகாரிகளுடனே ஜோ பைடன் இங்கிலாந்து வந்தடைந்தார். இதனால் அவருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை இந்த 400 பேர்கள் குழு முன்னெடுக்கும் என்றே கூறப்படுகிரது.