ராணியாரின் இறுதிச்சடங்கு நாள்.. ரத்தான அறுவை சிகிச்சை: கொந்தளித்த நோயாளிகள்
பிரிட்டன் ராணியாரின் இறுதிச்சடங்கு நாளான திங்களன்று விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகள் ரத்து செய்யப்பட்டதால் நோயாளிகள் கொந்தளித்துள்ளனர்.
குறித்த விடயம் ஜனநாயகத்திற்கு எதிரானது எனவும், வலியுடன் தாங்கள் எத்தனை நாள் இனி காத்திருக்க வேண்டும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
தொடர் மருத்துவ ஆலோசனை தேவைப்படும் 71 வயதான இலா பெல் என்ற பெண்மணிக்கான மருத்துவர் சந்திப்பு ஒருவாரம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.
மரபியல் வியாதியால் அவதிப்படும் குறித்த பெண்மணி 10ல் இருந்து 12 வாரத்திற்கு ஒருமுறை சிறப்பு சிகிச்சைக்காக மருத்துவமனையை நாடுவார்.
தற்போது அவரது சிகிச்சையானது ஒருவாரத்திற்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. வலி காரணமாக தம்மால் சரிவர தூங்க முடியவில்லை என கூறும் இலா பெல், 20 நிமிடத்திற்கு ஒருமுறை விழித்துக்கொள்ளும் நிலை உள்ளது என்றார்.
ராணியாருக்கு மதிப்பளிப்பதாக கூறும் இலா பெல், ஏன் 10 நாட்கள் வரையில் துக்கமனுசரிக்க வேண்டும் என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.