ராணியாருக்கு இறுதி அஞ்சலி... வரிசையில் நின்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்: சிக்கிய இளைஞர்
பிரிட்டன் ராணியாருக்கு இறுதி அஞ்சலி செலுத்த வரிசையில் காத்திருந்த இரு பெண்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக நீதிமன்ற விசாரணையில் தெரியவந்துள்ளது.
புதன்கிழமை மாலை வெஸ்ட்மின்ஸ்டர் அரங்கத்தில் பொதுமக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்ட நிலையில், திரளான பொதுமக்க விக்டோரியா டவர் கார்டன்ஸ் அருகே துக்கம் அனுசரிக்க திரண்டனர்.
இந்த நிலையிலேயே 19 வயதேயான Adio Adeshine அந்த மக்கள் முன்னிலையில் அருவருப்பாக நடந்து கொண்டுள்ளார். மட்டுமின்றி, இரு பெண்களை சீண்டியும் உள்ளார்.
இதனையடுத்து அங்கிருந்த மக்கள் சுற்றிவளைக்க, அந்த இளைஞர் பின்னர் தேம்ஸ் நதியில் குதித்தது தப்பியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.
ஆனால் சுதாரித்துக் கொண்ட பொலிசார், அந்த இளைஞரை சுற்றிவளைத்து கைது செய்துள்ளனர். இதனையடுத்து வெஸ்ட்மின்ஸ்டர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட அந்த நபர் மீது இரண்டு பாலியல் வன்கொடுமைகள் குற்றச்சாட்டுகளும் மற்றும் பாலியல் தீங்கு தடுப்பு ஆணையை மீறியதாக இரண்டு குற்றச்சாட்டுகளும் பதியப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இரு பெண்களும் ராணியாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் நோக்கில் பல மணி நேரமாக காத்திருப்பவர்கள் என நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, தன்மீதான குற்றச்சாட்டுகளை குறித்த இளைஞர் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இருப்பினும், அக்டோபர் 14ம் திகதி அடுத்த விசாரணை முன்னெடுக்கப்படும் வரையில் அந்த இளைஞர் பொலிஸ் காவலில் இருப்பார் என்றே கூறப்படுகிறது.