பிரிட்டனில் தஞ்சம் கோருவோர் தொடர்பில் பிரதமர் போறிஸ் அதிரடி நடவடிக்கை !

Boris Johnson Britain Prime Minister Africa-Rwanda Repatriation center Special camp English Channel refugees
By Sulokshi Apr 15, 2022 08:36 AM GMT
Report

பிரிட்டனில் தஞ்சம் கோருவோர் தொடர்பான புதிய திட்டத்தை பிரிட்டன் பிரதமர் பொறிஸ் ஜோன்சன்  (Boris Johnson)வெளியிட்டிருக்கிறார்.

அதன்படி படகுகளில் வந்து நாட்டுக்குள் புகுந்து புகலிடம் கோருவோரைத் திருப்பி அனுப்புவதற்கான நிலையம் ஒன்று ஆபிரிக்கா- றுவாண்டா நாட்டில் திறக்கப்படவுள்ளதாக அவர் (Boris Johnson) குறிப்பிட்டுள்ளார்.

ஆட்களைக் கடத்துவோரிடம் இருந்து பல்லாயிரக் கணக்கான உயிர்களைப் பாதுகாப்பதற்கு இந்தத் திட்டம் மிக அவ சியமானது என்றும் பிரதமர் போறிஸ் (Boris Johnson) வலியுறுத்தியுள்ளார்.

தனிஆட்களாகப் படகுகளிலும் வேறு வழிகளிலும் பிரிட்டனுக்கு வருகின்றவர் களைப் பராமரிக்கவும் அவர்களது கோரிக்கைகளைப் பரிசீலிக்கவும் றுவாண்டா அரசு இணங்கியுள்ளது.

அதற்கான 120 மில்லியன் பவுண்ட்ஸ் செலவிலான திட்ட உடன்படிக்கை ஒன்றை அந்நாட்டு அரசுடன் செய்து கொள்ளும் ஏற்பாடுகளில் பிரிட்டன் உள்துறை அமைச்சர் பிரித்தி பட்டேல் (Priti Patel) ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த திட்டம் முதற் கட்டமாக ஐந்து ஆண்டுகள் நடைமுறைப்படுத்தப்படும். முதலில் ஆங்கிலக் கால்வாய் தாண்டிவரும் குடியேறி களில் ஆண்கள் மட்டுமே றுவாண்டா முகாமுக்கு அனுப்பிவைக்கப்படுவர்.

அரசியல் அகதிகள் தவிர்ந்த பொருளாதார நோக்கங்களுடன் வருகின்றவர்களே ஒரு வழி விமான ரிக்கெற் வழங்கப்பட்டு -சுமார் ஆறாயிரம் கிலோ மீற்றர்கள் தொலைவில்-கிழக்கு ஆபிரிக்காவில்உள்ள முகாமுக்குச் செல்ல நேரிடும் என குறிப்பிடபட்டுள்ளது.

அதேவேளை ஆபிரிக்கா தவிர்ந்த ஏனைய நாடுகளில் இருந்து வருகின்ற அகதிகள் எவ்வாறு கையாளப்படுவர் என்பது பற்றித் தெளிவாக எதுவும் தெரியவரவில்லை.

இந்த நிலையில் பிரிட்டனில் தஞ்சம் கோருவோரைத்வேறொரு நாட்டில் தங்க வைக்கவும் அவர்களது விண்ணப்பங்களைப் பரிசீலித்து முடிவுகளை எடுக்கவும் றுவாண்டா அரசுக்கு அனுமதி வழங்குவதில் பலவித சட்டச் சிக்கல்கள் எழக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

  அதேவேளை சட்ட ரீதியிலும் மனித உரிமைகள் விடயத்திலும் இந்த பிரிட்டிஷ் – றுவாண்டா உடன்படிக்கை சவாலுக்கு உட்படலாம் என மனித உரிமைகள் இயக்கங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் பெரும் அவலங்களைத் தாண்டி ஆங்கிலக் கால்வாய் ஊடே வருகின்றவர்களை வெகு தொலைவுக்குத் திருப்பி அனுப்பும் ஜோன்சன் அரசின் திட்டத்தை எதிர்க் கட்சியும் மனித உரிமை அமைப்பு களும் கண்டித்துள்ளன.

இதேவேளை டென்மார்க் நாடும் இதேபோன்று அங்கு புகலிடம் கோரி வருவோரை றுவாண்டாநாட்டில் வைத்துப் பராமரித்துத் தஞ்சக் கோரிக்கைகளை அங்கு வைத்தே முடிவு செய்யத் திட்டமிட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் தெற்கு, Jaffna, Toronto, Canada

24 Sep, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Paris, France, Bex, Switzerland

12 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
நன்றி நவிலல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US