டொராண்டோவில் இந்த வார இறுதியில் காலைநிலை குறித்த எச்சரிக்கை
இந்த வார இறுதியில் டொராண்டோவில் வெயில், மழை மற்றும் அதிக ஈரப்பதம் கலந்த வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கனடிய சுற்றுச்சூழல் திணைக்களத்தின் கணிப்பின்படி என இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெப்பநிலை அதிகபட்சமாக 27 பாகை செல்சியஸாக பதிவாகும். பகுதி மேகமூட்டமான வானிலையுடன் 40 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன், இடியுடன் கூடிய மழைக்கான சாத்தியக்கூறும் உள்ளது.

ஈரப்பதம் காரணமாக உணரும் வெப்பநிலை 34 ஆக இருக்கும். இரவில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 21பாகை செல்சியஸாக குறையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
சனிக்கிழமையன்றும் இதேபோன்ற வானிலையே தொடரும். அதிகபட்ச வெப்பநிலை 29 பாகை செல்சியாக உயரும். 60 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளதுடன் இடியுடன் கூடிய மழை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இடையிடையே மேகமூட்டமான சூழல் நிலவுவதுடன், வெப்பநிலை 37 வரை எட்டக்கூடும். இரவில் குறைந்தபட்ச வெப்பநிலை 19 பாகை செல்சியதாக இருக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமையன்று வெப்பநிலை அதிகபட்சமாக 28 பாகை செல்சியஸ் வரை இருக்கும். 30 சதவீதம் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அன்றைய இரவு நேரத்தில் வெப்பநிலை 18 பாகை செல்சியாககக் குறையக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.