ரணில் விக்ரமசிங்கவிற்கு பிணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
ரணிலின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். ரணிலின் பிரதான இருதய நாளங்களில் மூன்று நாளங்களில் அடைப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
சிறுநீரக நோய், நீரிழிவு நோய் போன்றவற்றினால் ரணில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நோய் எதிர்ப்பு சக்தி பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவ காரணிகளின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதிக்கு பிணை வழங்குமாறு அவரது சட்டத்தரணிகள் நீதிமன்றில் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் சட்ட மா அதிபர் திணைக்களம் பிணை வழங்கக் கூடாது என வாதிட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த வாதப் பிரதிவாதங்களின் அடிப்படையில் ரணிலுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.