ரொறன்ரோவில் முன்னணி சிறுவர் மருத்துவமனை மீது சைபர் தாக்குதல்
றொரன்டோவின் முன்னணி சிறுவர் மருத்துவமனை மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கணனி கட்டமைப்பின் மீது ரான்சம்வெயார் முறையிலான சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக சிக் கிட்ஸ் மருத்துவமனை அறிவித்துள்ளது.
[C8MB7H
இந்த கணனி கட்டமைப்பினை சீர் செய்வதற்கு சில வாரங்கள் வரையில் செல்லும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
அவசர சேவை பிரிவு, நேரத்தை ஒதுக்கி கொள்ளுதல் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளுக்கு இந்த தாக்குதலினால் பாதிப்பு கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோயாளர்களின் தனிப்பட்ட விபரங்கள் கசிந்தமைக்கான எவ்வித தகவல்களும் கிடையாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கணனி கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள கோளாறை சரி செய்ய துரித கதியில் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.