இங்கிலாந்தில் காதலி வாங்கிகொடுத்த காளான் சூப் ; ஆசையாக ருசிக்க சென்ற நபருக்கு அதிர்ச்சி!
காதலில் வாங்கி கொடுத்த காளான் சூப்பை ஆசையாக ருசிக்க சென்ற நபருக்கு சூப்பில் எ;லி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
இங்கிலாந்தின் கென்ட் நகரை சேர்ந்தவர் சாம்ஹேவர்டு. இவரது காதலி எமிலி இவர் அங்குள்ள சீன உணவு விடுதியில் சூப் ஆர்டர் செய்து அதனை வீட்டுக்கு கொண்டு வந்து காளான் நூடூல்ஸ் சூப் என காதலருக்கு கொடுத்தார்.
மிரண்டு போன நபர்
அதை ஆசையாக பருக தொடங்கிய சாம் சூப்பில் ஏதோ ஒன்று நகர்வதை கவனித்தார். முதலில் அது ஒரு பெரிய காளானாக இருக்கலாம் என நினைத்தார். ஆனால் அதில் இருந்து ஒரு பெரிய வால் மேலே வந்தது.
இதனால் மிரண்டு போன அவர் அது எலி என்பதை கண்டார். இதனையடுத்து அதிர்ச்சியடைந்த அவர் உடனே அதை வீடியோ எடுத்து சம்பந்தப்பட்ட உணவு விடுதிக்கு போன் செய்து விசாரித்தார்.
எனினும் அந்த உணவு விடுதி ஊழியர்கள் அந்த சூப் எங்களது உணவகத்தில் தயாரித்தது இல்லை என கூறினர்.
இந்நிலையில் சூப்பில் எலி மிதந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.