RCB அணியின் முன்னணி வீரர் யாஷ் தயாள் கைது ; நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
திருமண மோசடி புகார் தொடர்பில் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் ஒருவரினால் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வேகப்பந்து வீச்சாளரான யாஷ் தயாள் மீது, காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளது.
அந்தப் பெண் அளித்த புகாரில், கடந்த 5 ஆண்டுகளாக யாஷ் தயாளுடன் உறவில் இருந்தேன்.
இந்த 5 ஆண்டுகளில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் சுரண்டப்பட்டதாக கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல் யாஷ் தயாள் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறி தன்னை ஏமாற்றியதாகவும் புகாரில் கூறி இருந்தார்.
அந்த புகாருக்கு பின் யாஷ் தயாள் தொடர்புடைய ஸ்க்ரீன்ஷாட், வீடியோ அழைப்புகள் உள்ளிட்டவை வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
அத்துடன் அவருக்குப் பல பெண்களுடன் தொடர்பு இருப்பதாகவும், அவர் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி தன்னை மிரட்டி வருவதாகவும் குறித்த பெண் காவல்நிலையத்தில் முறைப்பாடளித்திருந்தார்.
இதற்கமைய குறித்த முறைப்பாடு தொடர்பில் உத்தரப்பிரதேச காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து யாஷ் தயாள் மீது உத்தரப்பிரதேச காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இந்தநிலையில் யாஷ் தயாளை கைது செய்ய அலகாபாத் மேல் நீதிமன்றம் தடை விதித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.